தலைமறைவான பெண் மகளை தொலைபேசியில் அழைத்து கூறிய அதிரவைக்கும் தகவல்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திடீரென தலைமறைவான நிலையில், தன் மகளை தொலைபேசியில் அழைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவலைக் கூறியுள்ளார்.
கணவனைக் கொன்று பைக்குள் அடைத்த பெண்
சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஜாஷ்பூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் பகத் (43). சந்தோஷின் மனைவி மாங்ரிதா.
கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 7ஆம் திகதி சந்தோஷுக்கும் மாங்ரிதாவுக்கும் வழக்கம்போல வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த நாளும் சண்டை நீடித்த நிலையில், மாங்ரிதா திடீரென தலைமறைவாகியுள்ளார்.

பின்னர், தன் மகளை தொலைபேசியில் அழைத்த மாங்ரிதா, தான் சந்தோஷைக் கொலை செய்து அவரது உடலை பை ஒன்றில் அடைத்துவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக மாங்ரிதாவின் மகள் சந்தோஷின் அண்ணனை அழைத்து விடயத்தைக் கூற, அவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
பொலிசார் வந்து பை ஒன்றிற்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்த சந்தோஷின் உடலைக் கைப்பற்றி அதை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளார்கள்.
அத்துடன், தலைமறைவான மாங்ரிதாவைத் தீவிரமாக தேடிவருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |