அமெரிக்காவின் சுகந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு: கைது செய்யப்பட்ட மர்ம நபர்!
அமெரிக்காவின் சுகந்திர தினத்தை முன்னிட்டு சிகாகோவின் ஹைலேண்ட் பூங்காவில் நடத்தப்பட்ட அணிவகுப்பில் தீடீரென பயங்கர துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், துப்பாக்கி சூடு நடத்தியவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் ஜூலை 4ம் திகதி சுகந்திர தினத்தை முன்னிட்டு சிகாகோவின் ஹைலேண்ட் பூங்காவில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது தீடீரென துப்பாக்கியுடன் தோன்றிய அடையாளம் தெரியாத மர்ம நபர் பூங்காவில் அணிவகுப்பில் கலந்து கொண்டர்கள் மீது சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதில் 6 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக தப்பித்து ஓடவே, பொலிஸார் அந்த பகுதியில் இருந்து துப்பாக்கி ஒன்றை மட்டும் கைப்பற்றி விசாரணை நடத்த தொடங்கினர்.
At least six people are dead after a Fourth of July parade in the Chicago suburb of Highland Park ended in gunfire. The shooter is still at large.
— USA TODAY (@USATODAY) July 4, 2022
Read more: https://t.co/2YfmwvRaND pic.twitter.com/rLY8xGdZAK
இந்தநிலையில், ஹைலேண்ட் பார்க் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் Robert E Crimo-வை ரோந்து காவல்துறையினர், நகரின் போக்குவரத்து சிக்னலின் அருகில் அடையாளம் கண்டுள்ளனர்.
இதை உணர்ந்த Robert E Crimo(22) உடனடியாக அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளான், இருப்பினும் அவனை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவத்திற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வெளியிட்ட அறிக்கையில் ஒன்றில், இந்த சுகந்திர தினத்தில் நடத்தப்பட்ட புத்தியில்லாத துப்பாக்கி வன்முறையால் நானும், அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில்லும் அதிர்ச்சியடைந்தோம் எனத் தெரிவித்தார்.
US President Joe Biden holds a moment of silence for the victims of a shooting at a Fourth of July parade in Chicago.
— Sky News (@SkyNews) July 5, 2022
Read more on this story from the US: https://t.co/OiepnbGz3G pic.twitter.com/A92lYQDAxh
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய ஜனாதிபதி புடினின் வேண்டுகோளை நிராகரித்த சீனா!
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் துப்பாக்கி சீர்திருத்த சட்டத்தில் சமீபத்தில் நான் கையெழுத்திட்டேன். இருப்பினும் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன, துப்பாக்கி வன்முறை தொடர்பான தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதை நான் கைவிடப்போவது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
BREAKING: Robert "Bobby" Crimo III has been identified as the person of interest in the deadly mass shooting in Highland Park, Illinois (near Chicago). Six were killed & dozens injured at the July 4th holiday parade massacre. #HighlandPark pic.twitter.com/sgjxB0G6aT
— Andy Ngô ?️? (@MrAndyNgo) July 4, 2022