வெளிநாட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி மருத்துவர்: வெளியான அதிர்ச்சி பின்னணி
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மருத்துவர் பரம்ஜித் சோப்ரா
சிகாகோ நகரில் குடியிருந்து வரும் 62 வயதான பரம்ஜித் சோப்ரா என்ற மருத்துவரே மர்ம நபரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு சென்றிருந்தார் மருத்துவர் பரம்ஜித் சோப்ரா.
@romi
செப்டம்பர் மத்தியில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் 40,000 பேர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையிலேயே தனியாக சிக்கிய மருத்துவர் சோப்ராவை மர்ம நபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
நடைபாதையில் தள்ளிவிட்டு, மூர்க்கத்தனமாக தாக்கியதாக மருத்துவர் சோப்ராவே குறிப்பிட்டுள்ளார். இதில் அவரது முதுகெலும்பு காயம்பட்டதாக கூறப்படுகிறது. மாநாட்டு மையத்தில் இருந்து சற்று தூரத்தில் நடந்து சென்றதாக கூறும் மருத்துவர் சோப்ரா,
@getty
தாம் சீக்கியர் என்பதால்
அப்போது திடீரென்று மர்ம நபர் ஒருவர் தம்மை தாக்கியதாக தெரிவித்துள்ளார். செப்டம்பர் 11ம் திகதி நடந்த இந்த தாக்குதல் தமது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என்றார்.
அந்த நபர் தம்மை எட்டித்தள்ளியதும், கடந்து சென்ற பேருந்துக்கும் சில அடி தூரத்தில் தாம் தரையில் விழுந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர் கொள்ளையிடும் முயற்சியில் தம்மை தாக்கவில்லை எனவும், ஆனால் தாம் சீக்கியர் என்பதால் தாக்கியிருக்கலாம் என அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
@romi
கண்டிப்பாக இது இனவாத தாக்குதல் என்றே தாம் கருதுவதாகவும் சோப்ரா குறிப்பிட்டுள்ளார். சிகாகோ நகரம் குற்றச்செயல்கள் மிகுந்து காணப்படுவதாகவும், ஆனால் நகர நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க தவறுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |