சூப்பரான சுவையில் கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா: ரெசிபி இதோ
சிக்கனை நாம் பல வகைகளில் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்காவை பெரும்பாலும் சாப்பிட்டிருக்க மாட்டோம்.
இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
சூப்பரான சுவையில் கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 5 ஸ்பூன்
- வெங்காயம்- 3
- தக்காளி- 2
- சிக்கன்- 1kg
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 7 பல்
- மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
- மல்லி தூள்- 2 ஸ்பூன்
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- சிக்கன் மசாலா- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான பொருட்கள்
- கருவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள சிக்கன் சேர்த்து அதில் பொரித்த வெங்காயம், நறுக்கிய தக்காளி, இடித்த இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மிளகு தூள், சிக்கன் மசாலா, தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை சேர்த்து பிணைந்து ஒரு மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பிணைந்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
பின் ஒரு மூடி போட்டு சிக்கனை நன்கு வேகவைக்கவும். சிக்கன் வெந்து வந்ததும் இறுதியாக அதில் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |