நாவூறும் சுவையில் கிரீன் சிக்கன் கிரேவி: எப்படி செய்வது?
சிக்கனை நாம் பல வகைகளில் செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்த வித்யாசமான கிரீன் சிக்கன் கிரேவியை பெரும்பாலும் சாப்பிட்டிருக்க மாட்டோம்.
இந்த கிரீன் சிக்கன் கிரேவி சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
வித்யாமசான, நாவூறும் சுவையில் கிரீன் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- பிரிஞ்சி இலை- 2
- பட்டை- 2
- ஏலக்காய்- 2
- கிராம்பு- 2
- வெங்காயம்- 2
- சிக்கன்- 1/2 kg
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 2
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- சீரக தூள்- 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா- 1/2 ஸ்பூன்
- மல்லி தூள்- 2 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- புதினா- 1 கைப்பிடி
- முந்திரி- 7
- பச்சைமிளகாய்- 3- 4
- தயிர்- 4 ஸ்பூன்
- மிளகு தூள்- 1/2 ஸ்பூன்
- கசூரி மேத்தி - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதக்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
அடுத்து அதில் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரக தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு வேக வைக்கவும்.
இதனை தொடர்ந்து ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய், தயிர், ஊறவைத்த முந்திரி பருப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அரைத்த கலவையை சிக்கனில் சேர்த்து கிளறி நன்கு வேகவைக்கவும்.
சிக்கன் வெந்ததும் இறுதியாக இதில் மிளகு தூள், கசூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கிரீன் சிக்கன் கிரேவி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |