காரசாரமான சுவையில் பிரியாணிக்கு வைக்கப்படும் சிக்கன் கிரேவி: ரெசிபி இதோ
பிரியாணிக்கு சிக்கன் கிரேவி இல்லையெனில் அந்த உணவு முழுமைப் பெறாது.
என்னதான் ருசியான பிரியாணியாக இருந்தாலும் தொட்டுக்கொள்ள இந்த சிக்கன் கிரேவிதான் அதன் கூடுதல் சுவையே.
அந்தவகையில் பிரியாணிக்கு வைக்கப்படும் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
istock
தேவையான பொருட்கள்
- சிக்கன்- 1kg
- வெங்காயம்- 2
- இஞ்சி- 2 துண்டு
- பூண்டு- 6
- கொத்தமல்லி இலை- 1 கைப்பிடி
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- புதினா- 1 கைப்பிடி
- தக்காளி- 3
- முந்திரி- 15
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- சிக்கன் மசாலா- 1 ஸ்பூன்
- பட்டை- 2 துண்டு
- கிராம்பு- 3
- சோம்பு- ½ ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- ஏலக்காய்- 2
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மல்லி தூள்- 2 ஸ்பூன்
- கடலை எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் 3 ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கொத்தமல்லி, புதினா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி பின் முந்திரி மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து வதக்கிய பொருட்களை நன்கு ஆறவைத்து இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து, ஒரு பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
istock
பின் இதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிக்கனை 90% வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், சிக்கன் மசாலா சேர்த்து கிளறவும்.
பின் இதில் அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து சிக்கன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் அதில் வேகவைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறுதியில் கருவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |