காலில் விழுந்த சிக்கன் நக்கெட்ஸ்; 8 வயது சிறுமிக்கு 26 கோடி இழப்பீடு வழங்கிய உணவகம்
சிக்கன் நக்கெட்ஸ் காலில் விழுந்ததில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான எட்டு வயது சிறுமிக்கு McDonald's உணவகம் இழப்பீடு வழங்கியுள்ளது.
புளோரிடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமிக்கு $800,000 (இலங்கை பணமதிப்பில் ரூபா.26 கோடி) இழப்பீடு கிடைத்தது.
சிறுமி ஒலிவியா கராபல்லோவின் (Olivia Caraballo) கால் மீது சூடான நகெட்ஸ் விழுந்தது. அப்போது சிறுமியின் குடும்பத்தினர் 15 மில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூபா.492 கோடி) நஷ்டஈடு கேட்டனர்.
ஒலிவியாவுக்கு நான்கு வயதாக இருந்தபோது 2019-ல் இந்த சம்பவம் நடந்தது. புளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேல் அருகே உள்ள தமராக்கில் உள்ள மெக்டொனால்ட்ஸ் டிரைவ்-த்ரூவில் அவரது காரில் உணவைத் திறக்கும்போது சிக்கன் நக்கெட்ஸ் அவரது காலில் விழுந்தது. இதனால் சிறுமியின் காலில் எரிந்த தழும்பு இன்னும் உள்ளது.
ஒலிவியா அனுபவித்த வலி மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கான இழப்பீட்டு தொகையாக $400,000 மற்றும் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மருத்துவ செலவுக்கான இழப்பீட்டு தொகையாக $400,000 வழங்கப்பட்டது.
Olivia Caraballo along with her mother Image: AFP
குழந்தை காலில் உணவு விழுந்தபோது அலறித் துடித்த ஆடியோ மற்றும் தீக்காயங்களின் புகைப்படங்களை வழக்கறிஞர்கள் பகிர்ந்ததை அடுத்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மெக்டொனால்ட் தரப்பில், குடும்பத்திற்கு $156,000 தான் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டனர். சிறுமிக்கு மூன்று வாரங்களில் தீக்காயம் குணமாகிவிட்டதாகவும், வலி இல்லாமல் இருந்ததாகவும் கூறினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
McDonald’s pays huge compensation, 800,000 USD, McDonald’s Chicken Nuggets, Olivia Caraballo leg Burnt