சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட நபரின் காலை கழுவி மரியாதை செய்த முதலமைச்சர்
மத்திய பிரதேசத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபரின் கால்களை கழுவி, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுஹான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மத்திய பிரதேசம் மாநிலம், சித்தி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மது போதையில் மனநலம் பாதித்த பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவன் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Flash:#MadhyaPradesh Chief Minister Shivraj Singh Chouhan meets Dashmat Rawat and washes his feet at CM House in #Bhopal.
— Yuvraj Singh Mann (@yuvnique) July 6, 2023
In a viral video from Sidhi, accused Pravesh Shukla was seen urinating on Rawat. pic.twitter.com/3ccvYnilbE
இந்த விவகாரத்தில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய நிலையில், பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
मप्र सरकार द्वारा बुलडोजर की कार्रवाई @ChouhanShivraj
— Vaishali Poddar (@PoddarVaishali) July 5, 2023
कांग्रेस, आम आदमी पार्टी और अन्य सरकार के लिए सबक, जो जातीगत और पार्टी के हित के लिये अपराधियों को बचाते हैं !
मामा @ChouhanShivraj को साधुवाद ??#PraveshShukla pic.twitter.com/XrtYt83lB2
மேலும், முதலமைச்சரின் உத்தரவுப்படி பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லாவின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது.
இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், சிறுநீர் கழித்து துன்புறுத்தப்பட்ட பழங்குடியின நபர் தஷ்மத் ராவத்தை, தனது வீட்டிற்கு வரவழைத்து பாதங்களை கழுவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |