திருச்சியில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ.., 5000 பேருக்கு மட்டும் அனுமதி
முதலமைச்சர் விஜய் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று திருச்சி செல்கிறார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 7 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.
சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இன்று மாலை டிவிஎஸ் டோல்கேட், பால் பண்ணை, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ரோடு ஷோ நடைபெறுகிறது.
பின்னர் புனித ஜோசப் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
முதலமைச்சரின் நிகழ்ச்சி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு பெற்ற 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |