சசிகலா ஆதரிக்கும் முதலமைச்சர் வேட்பாளர் யார்? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்
சசிகலா தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் யாதை முதல்வராக முன்நிறுத்துவார் என்ற கேள்விக்கு தற்போது அதிகாரப்பூர்வ பதில் கிடைத்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விட்டு விடுதலையாகி சென்னை திரும்பியுள்ள சசிகலா எப்போது அரசியலில் களமிறங்குவார் என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மரியாதை செலுத்திய சசிகலா, விரைவில் தொண்டர்களை சந்திப்பேன் என உறுதியளித்தார்.
சசிகலா களமிறங்கிய பிறகு தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்க்ள ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமைக் கழக அலுவலகத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில், சசிகலா நல்லாசியுடன் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சராக்க அயராது பாடுபடுவது என அமமுக பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும், இந்த கூட்டத்தில் சசிகலா பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.