மீண்டும் ஒரு கொள்ளைநோய்? சீனாவில் பரவும் வைரஸ் தொற்றால் அச்சம்
சீனாவில் பரவிவரும் வைரஸ் தொற்று ஒன்று, மீண்டும் ஒரு கொள்ளைநோய் பரவுகிறதோ என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
சீனாவில் பரவும் வைரஸ் தொற்று
சீனாவில், சுமார் 10,000 பேர் சிக்குன்குனியா என்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொசுக்கள் மூலம் பரவும் இந்த சிக்குன்குனியா வைரஸ் தொற்று, காய்ச்சல், தலைவலி, தசை வலி, மூட்டு வீக்கம் மற்றும் தோல் அரிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே வேறு உடல் உபாதைகளால் அவதியுற்றுவருவோருக்கு இந்த சிக்குன்குனியா வைரஸ் தொற்று ஏற்படுமானால் அது அவர்களுக்கு ஆபத்தாக முடியலாம்.
அமெரிக்க நோய்த் தடுப்பு மையம், இந்த சிக்குன்குனியா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் எதுவும் இல்லை என்கிறது.
சீவானில், தற்போது Foshan என்னும் நகரம் சிக்குன்குனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது ஹொங்ஹொங்கையும் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சிக்குன்குனியா பரவலைத் தடுக்க, சுகாதாரத்துறை அதிகாரிகள் கொசு வலைகள் விநியோகம் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
ட்ரோன்கள் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைத் தேடிவரும் அதிகாரிகள், வீடுகள் முன் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத மக்களுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக எச்சரித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |