சிறார்கள் இருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றிய நாடு... கடுமையாக விமர்சித்த ஐநா மனித உரிமைகள் அலுவலகம்
ஈரானில் 17 மற்றும் 22 வயதுடைய இருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதை ஐக்கிய நாடுகள் மன்றம் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், மரண தனடனை விதிப்பதை உடனடியாக கைவிடவும் கோரியுள்ளது.
தங்களது கடமை
ஈரானில் கொலை வழக்கில் சிக்கிய 17 வயது Hamidreza Azari என்பவருக்கு வெள்ளிக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஈரானில் சிறுவர் குற்றவாளி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் சம்பவம் இதுவென கூறப்படுகிறது.
@ap
இந்த நிலையில் ஐநா மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 வயதிற்குட்பட்ட தனிநபர்களால் செய்யப்படும் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதும், அவற்றை செயல்படுத்துவதை தடைசெய்ய வேண்டியது சர்வதேச மரபுகளின் கீழ் தங்களது கடமை என குறிப்பிட்டுள்ளது.
17 வயது சிறுவன் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை எனவும், அதே நாளில் 22 வயது இளைஞர் ஒருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதையும் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
2022 செப்டம்பரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட 8வது நபருக்கு வெள்ளிக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உடனடியாக நிறுத்த வேண்டும்
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் உரிய நடைமுறைகளை விசாரணையின் போது பின்பற்றப்படவில்லை எனவும் ஐநா மனித உரிமைகள் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஈரானிய குர்து இனத்தை சேர்ந்த 22 வயது Mahsa Amini என்பவர் பொலிஸ் காவலில் மரணமடைந்த விவகாரம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போராட்டங்களை ஒடுக்க ஈரான் கடுமையான ஒடுக்குமுறையை மேற்கொண்டது, இதனால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
@getty
மட்டுமின்றி, சிறுபான்மையினருக்கு விகிதாச்சார அடிப்படையில் மரணதண்டனை விதிக்கப்படும் அதே வேளையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு, அதிக மரணதண்டனை விதிக்கப்படும் நாடுகளில் ஈரானும் ஒன்று.
இந்த நிலையில் ஈரான் மரண தண்டனை நிறைவேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மரணதண்டனை விதிப்பதை தடை விதிக்க வேண்டும் என்றும் ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் Elizabeth Throssell வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |