கனேடிய நகரமொன்றின் ஒரு நாள் மேயர் போட்டியில் வெற்றி பெற்றுள்ள சிறுமி
கனேடிய நகரமொன்று, ஒரு நாள் மேயர் என்னும் போட்டியை ஆண்டுதோறும் நடத்திவரும் நிலையில், ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சிறுமி ஒருத்தி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
கனேடிய நகரமொன்றின் ஒரு நாள் மேயர்
இளைய தலைமுறை, உள்ளூர் அரசு குறித்து என்ன நினைக்கிறது என்பதை அறியும் வகையில், கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Sault Ste. Marie நகரம், ஒரு நாள் மேயர் போட்டி ஒன்றை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

இந்த ஆண்டு, அந்த ஒரு நாள் மேயர் போட்டியில் வெற்றி பெற்றுள்ளவர், ஆட்லின் (Adelynn Somme) என்னும் சிறுமி.
ஆட்லின் ஐந்தாம் வகுப்பில்தான் படிக்கிறாள். ஆனால், அவளது எண்ணங்கள் முதிர்ச்சியுடனும், அதே நேரத்தில் சிறுபிள்ளைக்கே உரிய குறும்புடன் இணைந்தும் உள்ளன.
தான் மேயரானால், முதலில், நகர சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்ய இருப்பதாகக் கூறியுள்ளாள் ஆட்லின்.
தவறான செய்தி... தென்னாப்பிரிக்காவில் கொல்லப்பட்ட கனேடியர் குறித்து நண்பர் தெரிவித்துள்ள திடுக் தகவல்
அடுத்ததாக, மக்களுடைய மன நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு தான் அதிக ஆதரவு கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளாள் ஆட்லின்.
அத்துடன், நகரில் வெப்பநிலை 25 டிகிரிக்கு மேல் செல்லுமானால், நகர மக்கள் அனைவருக்கும் இலவசமாக ஐஸ்கிரீம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளாள் ஆட்லின்.

இதற்கிடையில், சீரியஸாகவே ஆட்லினை கௌரவிக்க உள்ளது Sault Ste. Marie நகர கவுன்சில்.
ஆம், இன்று நடைபெறும் Sault Ste. Marie நகர கவுன்சில் கூட்டத்தை ஆட்லின்தான் துவக்கி வைக்க இருக்கிறாள்.
நகர மேயரான மேத்யூ ஷூமேக்கரை ஆட்லின் சந்திக்க இருக்கும் நிலையில், ஆட்லின் படிக்கும் வகுப்பிலுள்ள பிள்ளைகளை மேயர் சந்திக்க இருப்பதுடன், அவர்கள் அனைவருக்கும் பீட்சாவும் வழங்கப்பட உள்ளதுதான் ஹைலைட்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |