குழந்தையில் தன்னை கடத்திய கும்பலுக்கு எதிராக.., வளர்ந்து வக்கீலாகி வாதாடி வென்ற இளைஞர்
7 வயதில் தன்னை கடத்திய கும்பலுக்கு எதிரான வழக்கில் வளர்ந்த பின்னர் வக்கீலாக மாறி வாதாடியுள்ளார்.
வக்கீலாக மாறிய இளைஞர்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேர்கர் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஹர்ஸ் ராஜ்.
இந்த சிறுவன் தனது உறவினர்கள் மற்றும் பெற்றோரில் முன்னிலையில் துப்பாக்கி முனையில் கொள்ளையர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டார்.
பின்னர், குழந்தையின் பெற்றோரிடம் இருந்து ரூ.55 லட்சம் கேட்டு கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். அவர்களை பொலிஸ் தேடி வந்ததால் சிறுவன் இருக்கும் இடத்தை மாற்றி கொண்டே இருந்தனர்.
அதாவது, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று கொண்டே இருந்தனர்.
பின்னர், கடந்த 2007 -ம் ஆண்டு மே மாதம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடித்து சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அடுத்த ஒரு வருடத்திலேயே இந்த கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட 14 பேரை பொலிஸார் கைது செய்தனர். அதன்படி, கடந்த 14 ஆண்டுகளாக இந்த கடத்தல் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடத்தப்பட்ட சிறுவன் ஹர்ஸ் ராஜ்க்கு தற்போது 24 வயதாகி வக்கீலாக மாறியுள்ளார். இவர், தனது கடத்தல் வழக்கில் இறுதி விசாரணையில் நீதிமன்றத்தில் தன் சார்பாக ஆஜராகி ராஜ் இறுதி வாதத்தை முன்வைத்துள்ளார்.
இவரின் வாதத்தை ஏற்ற நீதிபதி 14 பேரில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இவர்களில் 2 பேர் வழக்கு நடக்கும்போதே இடையில் உயிரிழந்தனர்.
கடந்த 2015 -ம் ஆண்டு முதல் தனது கடத்தல் வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தில் ஹர்ஸ் ராஜ் பார்த்து வந்துள்ளார்.
இதனால் கவரப்பட்டு 2022 - ல் ஆக்ரா சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றுள்ளார். பின்னர், தனது கடத்தல் வழக்கை வாதாடிய அரசு வக்கீலுக்கு உதவியாக இருந்துள்ளார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |