நாடொன்றில் HIV தொற்றுக்கு ஆளான நூற்றுக்கணக்கான குழந்தைகள்: அதிர்ச்சிப் பின்னணி

Pakistan HIV Symptoms
By Balamanuvelan Apr 14, 2026 11:01 AM GMT
Report

HIV தொற்று என்பது பொதுவாக பாலுறவு மூலம் பரவும் தொற்று என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.

ஆனால், பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் HIV தொற்றுக்கு ஆளான விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

HIV தொற்றுக்கு ஆளான நூற்றுக்கணக்கான குழந்தைகள்

முறையற்ற பாலுறவு மூலம் பரவும் HIV தொற்று, ஒரு ஆளிடமிருந்து அவரது துணைக்கும், தொற்றால் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து பிள்ளைகளுக்கும் பரவலாம். 

நாடொன்றில் HIV தொற்றுக்கு ஆளான நூற்றுக்கணக்கான குழந்தைகள்: அதிர்ச்சிப் பின்னணி | Child Hiv Outbreak In Pakistan By Reused Syringes

ஆனால், நூற்றுக்கணக்கான குழந்தைகள் HIV தொற்றுக்கு ஆளாகுமானால், நிச்சயம் அது தாயிடமிருந்து பிள்ளைகளுக்கு பரவிய தொற்றாக இருக்க வாய்ப்பில்லை.

பாகிஸ்தானில், 2024ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளூர் மருத்துவர் ஒருவர் நூற்றுக்கணக்கான குழந்தைகள் HIV தொற்றுக்கு ஆளாவதை கவனித்து, அதைக் குறித்து அரசை எச்சரித்துள்ளார். 

கூகுள் AI-ஐ மனைவியாக நினைத்த இளைஞர்: டிஜிட்டல் உலகில் வாழ எடுத்த விபரீத முடிவு

கூகுள் AI-ஐ மனைவியாக நினைத்த இளைஞர்: டிஜிட்டல் உலகில் வாழ எடுத்த விபரீத முடிவு

THQ Taunsa hospital என்னும் மருத்துவமனையில், ஊடகம் ஒன்று ரகசியமாக மேற்கொண்ட ஆய்வில், ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்துவது தெரியவந்தது.

அத்துடன், கிருமிநீக்கம் செய்யப்பட்ட கையுறை அணியாமல் பலருக்கு ஊசி போடப்பட்டுள்ளதும், பயன்படுத்திய சிரிஞ்சுகளை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவதும் ஆய்வில் தெரியவந்தது. 

நாடொன்றில் HIV தொற்றுக்கு ஆளான நூற்றுக்கணக்கான குழந்தைகள்: அதிர்ச்சிப் பின்னணி | Child Hiv Outbreak In Pakistan By Reused Syringes

அதாவது, HIV தொற்றுக்கு ஆளான யாரோ ஒருவருக்கு ஊசி போட பயன்படுத்திய சிரிஞ்சை பயன்படுத்தி மற்றவர்களுக்கும் ஊசி போடுவதால் பிள்ளைகள் பலருக்கு HIV பரவியுள்ளது. 

அந்த மருத்துவரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

விடயம் என்னவென்றால், சமீபத்தில் பிபிசி ஊடகம் மேற்கொண்ட ரகசிய ஆய்வில், முன்போலவே, ஏற்கனவே ஒருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு கூறுகிறது.

ஆனால், அது மட்டும் போதுமா, வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்யவேண்டாமா, பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பதில் சொல்வது யார், இந்த சுகாதாரமற்ற நடவடிக்கைகளை முற்றிலும் நிறுத்துவது எப்படி என பல விடையளிக்கப்படாத கேள்விகள் நீடிக்கின்றன! 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US