தலையில் கேட்ட குரல்கள்! கைக்குழந்தையின் தாயை சரமாரியாக கத்தியால் குத்திய பெண்
அமெரிக்காவில் மனநல பிரிவில் இருந்து வெளியேறிய பெண்ணொருவர், கடையொன்றில் குழந்தையின் தாயை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியால் குத்திய பெண்
கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணொருவர், தனது 10 மாத குழந்தையுடன் நியூயார்க்கின் புகழ்பெற்ற மேசிஸ் கடைக்கு சென்றுள்ளார். 
அவர் கழிவறையில் இருந்தபோது கெர்ரி அஹெர்ன் என்ற பெண் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் குழந்தை டயப்பர் மாற்றும் மேசையில் இருந்து தரையில் விழுந்ததாக தெரிய வந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், ஆனால் அதன் தாயார் முதுகு, தோள்பட்டை மற்றும் கையில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாகவும் நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
யாரையாவது கொன்றால்தான்
பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக பெல்லவியூ மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
இந்த கொடூரத்தை அரங்கேற்றிய கெர்ரி அஹெர்ன், அதே நாள் காலையில்தான் மன்ஹாட்டன் மனநல மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தார் என்பதும், அவர் அந்த மனநல மையத்தில் ஒரு வருடம் இருந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், அவரைப் பற்றி நீதிமன்றத்தில் மன்ஹாட்டன் உதவி மாவட்ட வழக்கறிஞர் கூறிய விடயம்தான் அதிர வைத்தது.
"அஹெர்ன் மேசிஸ் கடையில் ஒரு கத்தியை வாங்கி, யாரையாவது கொல்லத் தேடிக் கொண்டிருந்தார். ஏனெனில், யாரையாவது கொன்றால்தான் தான் கொல்லப்படாமல் இருக்க முடியும் என்று அவரது தலையில் இருந்த குரல்கள் அவரிடம் கூறியுள்ளன" என்று அவர் தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |