வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த தாயை சுட்டுக்கொன்ற பச்சிளங் குழந்தை! விளையாட்டு வினையாக முடிந்த சம்பவம்
அமெரிக்காவில் பச்சிளங் குழந்தை அவரது தாயை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் புளோரிடா நகரில் 21 வயது மதிக்கத்தக்க Shamaya Lynn என்ற இளம்பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை, அந்த பெண்ணுக்கு முக்கியமான வீடியோ கால் இருந்ததால் குழந்தையை விளையாட வைத்து விட்டு வீடியோ காலில் மும்முரமாக பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது குழந்தையின் கைக்கு குண்டுகள் நிறைந்த துப்பாக்கி கிடைத்துள்ளது. அதை வைத்து விளையாடி கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக சுட்டதில் எதிரே வீடியோ கால் பேசி கொண்டிருந்த பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்துள்ளார்.
அவருடன் வீடியோ காலில் இருந்தவர் இந்த சம்பவத்தை நேராக பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே 911 அவசர உதவியை தொடர்புகொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குண்டு பாய்ந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் குண்டு தலையில் இறங்கியதால் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாயின் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த விபரீத சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உலுக்கியுள்ளது.