சிறுவயதில் திகிலை ஏற்படுத்திய விடயம்: இலங்கை வம்சாவளியினர் கூறும் சுவாரஸ்ய தகவல்
பிரித்தானியாவில், ஒரு நகைச்சுவையாளராகவும், நடிகராகவும் நன்கறியப்படுபவர் ரொமேஷ் ரங்கநாதன். ரங்கநாதனுடைய பெற்றோர் இலங்கைத் தமிழர்கள் ஆவர்.
சிறுவயதில் திகிலை ஏற்படுத்திய விடயம்
இங்கிலாந்திலுள்ள Crawley என்னும் இடத்தில் பிறந்தவரும், தற்போதும் அங்கு வாழ்ந்துவருபவருமான ரங்கநாதன், சிறுவயதில் திகிலை ஏற்படுத்திய விடயம் ஒன்றைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்துகொள்கிறார்.
90களில் பிரபலமான Croydon Water Palace என்னும் ஒரு தன்ணீரை மையமாகக் கொண்ட தீம் பார்க் ஒன்று Purley Way என்னுமிடத்தில் இருந்துள்ளது.
Image: Dave J Hogan/Getty Images for Warner Bros
ஒரு காலத்தில் அந்த தீம் பார்க்கில் கூட்டம் அலைமோதிய நிலையில், அந்த தீம் பார்க் குறித்த சில வதந்திகளும் பரவியதுண்டாம். அந்த தீம் பார்க்கில், slides எனப்படும் வழுக்கியபடி வந்து தண்ணீரில் விழும் சறுக்கு விளையாட்டு பிரபலம்.
ஆனால், அந்த சறுக்குப் பாதைகளில் யாரோ கூர்மையான பிளேடுகளை பொருத்திவைத்துள்ளதாகவும், ஆகவே சறுக்கும் பிள்ளைகளை அவை காயப்படுத்திவிடக்கூடும் என்றும் வதந்திகள் பரவியுள்ளன.
வெகு காலத்திற்கு இந்த வதந்திகள் நீடித்து நிலைத்துள்ளன என்பதை 2017, 18களில் வெளியான ட்வீட்கள் உறுதி செய்கின்றன.
How an act of ostension (taping razor blades to a playground slide, https://t.co/Ma61bjXn60) feeds into fears and stokes distrust of “the others,” this time non-British citizens.
— It's an Urban Legend (@ULTweets) December 2, 2018
Note that police haven’t determined who did this and why. pic.twitter.com/e7m9xukNnu
தற்போது நினைத்தால்...
90களில் அந்த தீம் பார்க்குக்குச் செல்லும்போது பிள்ளைகள் எவ்வளவு பயந்தார்கள் என்பதை இப்போது எண்ணிப்பார்த்தால் வேடிக்கையாக உள்ளது என்று கூறுகிறார்கள் ரங்கநாதனும் அவரது Tom Davisம்.
அந்த சறுக்கு விளையாட்டு விளையாடும் இடத்தில், யாரோ பிளேடுகளைக் கொண்டு சென்று, அவற்றை ஆங்காங்கு பபுள் கம் உதவியால் ஒட்டிவைக்கமுடியுமா என எந்த சிறுபிள்ளையும் நினைக்கவில்லை, சிறுபிள்ளைகளால் அப்படியெல்லாம் நினைக்கவும் முடியாது என்கிறார்கள் அவர்கள்.
Image: Olly Groome @ Wikimedia Commons
கேட்கும் எதையும் நம்பிக்கொள்ளும் குணமுடைய சிறுபிள்ளைகளால் அப்படியெல்லாம் நடக்குமா என்று எண்ணிப்பார்க்கமுடியாது. கேட்பதை அப்படியே நம்பிவிடுவதுதானே சிறுபிள்ளைகளுடைய குணம் என்கிறார் Tom Davis. ஆக, அங்கு செல்லும் பிள்ளைகள் தங்களை அந்த பிளேடுகள் காயப்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார்கள்.
"you posh gits with your swanky leisure centres ... "
— It's an Urban Legend (@ULTweets) January 7, 2017
(Every water slide in Wales and elsewhere is embedded with razor blades.) pic.twitter.com/HBXIOYTU5D
பின்னர், பிரபலமான அந்த தீம் பார்க், நிதிப் பிரச்சினை முதலான பல்வேறு காரணங்களால் மூடப்பட்டுவிட்டாலும், ரொமேஷ் உட்பட, இன்னமும் அந்த வதந்திகள் குறித்து நினைவுகூருபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Image: Neil Mockford/GC Images
Image: Daire Brennan/Sportsfile via Getty Images