இலங்கை குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள்...தெற்காசிய நாடுகளுக்கு ஐ.நா எச்சரிக்கை
இலங்கையில் உள்ள குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் என ஐ.நா தகவல்
இலங்கையில் நான் பார்த்தது தெற்காசியாவின் மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை ஐ.நா
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள குழந்தைகள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள் என்று ஐ.நா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இலங்கையில் அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து, நாட்டில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் இலங்கை பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு கூட வழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
REUTERS
ஏப்ரல் மாதத்தில் இலங்கை தனது 51 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை, இதனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பிணை எடுப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை UN குழந்தைகள் அமைப்பின் (UNICEF) தெற்காசிய இயக்குனர் ஜார்ஜ் லாரியா-அட்ஜெய் தெரிவித்த கருத்தில், இலங்கையில் உள்ள குழந்தைகள் பசியுடன் படுக்கைக்கு செல்வதாகவும், அவர்களுக்கு அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
REUTERS
மேலும் தெற்காசியா முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் குழந்தைகளின் உயிருக்கு மேலும் அச்சுறுத்தலாக உள்ளது, இலங்கையில் நான் பார்த்தது தெற்காசியாவின் மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும் எனத் தெரிவித்தார்.
இலங்கையின் குழந்தை ஜனத்தொகையில் குறைந்தது பாதி பேருக்கு அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக UNICEF $25 மில்லியனுக்கான வேண்டுகோளை விடுத்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: கஃபே கடைக்குள் வேகமாக புகுந்த வேன்...விபத்தா அல்லது தாக்குதலா என ஆய்வாளர்கள் விசாரணை
இதில் குழந்தைகளிடையே வேகமாகப் பரவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க அரசாங்கம் இந்த மாதம் தனது சொந்த வேண்டுகோளையும் வெளியிட்டது.