கஃபே கடைக்குள் வேகமாக புகுந்த வேன்...விபத்தா அல்லது தாக்குதலா என ஆய்வாளர்கள் விசாரணை
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் வேன் விபத்து
இது தாக்குதலா அல்லது விபத்தா என கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் தீவிரம்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் (Brussels) வெள்ளிக்கிழமையன்று வேன் ஒன்று கஃபே கடைக்குள் மோதியதில் 6 பேர் வரை லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு நடைபெற்ற நிலையில், விபத்தி இடத்தில் இருந்து ஓட்டுநர் வேகமாக தப்பிச் சென்றுள்ளார்.
மேலும் அவர் வடக்கு நகரமான ஆண்ட்வெர்ப்பில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரது வேன் அருகிலுள்ள பிரஸ்ஸல்ஸ் நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
REUTERS
ஆறு பேர் வரை இந்த விபத்தில் காயமடைந்த இருக்கும் நிலையில், இது தாக்குதலா அல்லது விபத்தா என கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுத் தொடர்பாக பிரஸ்ஸல்ஸ் அரசு தரப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்த தகவலில் கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்களைப் பற்றி சிந்திக்க வைக்கின்றன, ஆனால் இது மட்டுமே சாத்தியம் அல்ல. இது ஒரு விபத்தாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காயமடைந்தவர்கள் யாரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: மீட்கப்பட்ட 25 ரகசிய ஆவணங்கள்...சட்ட சிக்கலில் முன்னாள் அமரிக்க ஜனாதிபதி டிரம்ப்!
சமூக ஊடகங்களில் நடந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளில் வெள்ளை வேன் வேகமாகப் பயணிப்பதையும் காட்டுமிராண்டித்தனமாகச் செல்வதையும் காட்டுகிறது.