McDonald’s நிறுவனத்தில் பணிபுரியும் குழந்தைகள்; விடுக்கப்பட்ட அபராதம்
அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாநிலத்தில் உள்ள McDonald’s நிறுவனத்தில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு வைத்துள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வேலைக்கு வைத்த குழந்தைகள்
சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக McDonald’s நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tayfun Coskun/Anadolu Agency via Getty Imag
இதன் காரணமாக மூன்று McDonald’s உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் கருத்து
10 வயது சிறுவர்கள குறைந்த சம்பளத்தில் வேலை செய்ததாகவும், மேலும் லூயிஸ்வில்லே பாயர் புட் எல்எல்சி நிறுவனமானது, 10 மெக்டொனால்டு உணவகங்களை நடத்துகிறது. அங்கு 24 சிறுவர்களும் அதிக நேர வேலையும், அதிகாலை 2மணி வரை வேலை செய்துள்ளதாவும். அவர்களுக்கு இதுவரையில் சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
அங்கு குழந்தைகள் வேலை செய்யும் காட்சிகள் சில வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.