கோபா அமெரிக்கா 2024: போட்டியைக் காண இறுதி ஊர்வலத்தை நிறுத்திய குடும்பத்தினர்!
சிலி மற்றும் பெரு இடையேயான கோபா அமெரிக்கா 2024 போட்டியை காண்பதற்காக இறுதி ஊர்வலத்தை நிறுத்தி வைத்த ஓர் குடும்பத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இறுதி ஊர்வலத்தை நிறுத்திய குடும்பத்தினர்
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வைரல் வீடியோவில், சிலி மற்றும் பெரு இடையேயான கோபா அமெரிக்கா 2024 போட்டியைக் காண குடும்பம் இறுதி ஊர்வலத்தை நிறுத்தி வைத்திருப்பது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் குடும்பத்தினர், இறந்த உறவினரின் திறந்த சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
Chupala toda Eurochota, aguante la Copa América pic.twitter.com/c46vtmoRsc
— 0800CJ (@0800Cj) June 23, 2024
இதனிடையே சவப்பெட்டி பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சவப்பெட்டிக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பேனரில், "ஃபெனா மாமா, நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றி. உங்களையும் உங்கள் காண்டோரியன் குடும்பத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்" என அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வீடியோவானது தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |