பிரித்தானியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்! வெளியான சிசிடிவி காட்சி
பிரித்தானியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அந்த நபர் துப்பாக்கியுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தெற்கு இங்கிலாந்தில் இருக்கும் Plymouth-ல் கடந்த வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகினர். இதில் மூன்று வயது குழந்தையும் பலியாகியிருந்தது.
இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியது Jake Davison என்ற 22 வயது நபர் தான் என்று பொலிசார் தெரிவித்திருந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் இவரின் சொந்த தாய் ஆவார்.
இதில் உயிரிழந்தவர்களின் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் வெளியாகியிருந்தது.
துப்பாக்கிச் சூடு நடத்திய பின்பு, தெருவிற்கு வந்த Jake Davison அங்கு கண்ணில் பட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
CCTV footage has emerged that appears to show Plymouth shooter Jake Davison crossing a road with what is believed to be a gun in his hand in the middle of his killing spree which left five people deadhttps://t.co/jnbOKcO8Xm pic.twitter.com/lElKkRzs8O
— ITV News (@itvnews) August 13, 2021
அப்போது அவன் அங்கிருக்கும் சாலையில் துப்பாக்கியுடன் கடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த சாலையில் நடந்து செல்லும் போது, அவன் கையில் துப்பாக்கியை சற்று மறைத்து வைத்து கொண்டு செல்கிறான்.
அதைத் தொடர்ந்து அவன் அங்கிருப்பவர்களை மிரட்டுவது போன்று உள்ளது.
ஆனால், இறுதியில் இத்தனை பேரை சுட்டுக் கொன்ற, Jake Davison தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.