தரையில் மோத போகிறோம்! விமானியின் கடைசி வார்த்தைகள்
அமெரிக்காவின் புளோரிடாவின் கிரீன் ஏக்ரஸில் குடியிருப்பு பகுதியில் Learjet 60 விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர்.
தரையில் மோத போகிறோம்
விமான விபத்துக்கு சற்று நேரத்திற்கு முன்பாக விமானிக்கும் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையே நடந்த இறுதி தகவல் தொடர்பு பரிமாற்ற ஆடியோ வெளியாகியுள்ளது.
மோசமான வானிலை மற்றும் பனி காரணமாக விபத்து நிகழப்போவதாக விமானி கூறுகிறார், அதில் விமானம் வேகமாக கீழிறங்குவதாக குறிப்பிடுகிறார்.
குறித்த ஆடியோவில், நிமிடத்திற்கு 8000 அடி கீழே இறங்குகிறோம், மே டே மே டே 10,000 அடி கீழே இறங்குகிறோம் என பதற்றத்துடன் கூறுகிறார்.
CHILLING AUDIO captures FEMALE PILOT’S FINAL MOMENTS before PLANE CRASHES in FLORIDA ‘MAYDAY, MAYDAY, we’re descending 10,000 FEET PER MINUTE’ ‘LOOK OUTSIDE JACK… HOLY FU*K WE’RE OUT OF TIME’ — TERRIFYING final words heard before impact https://t.co/AaHiQRI69N
— RT (@RT_com) November 1, 2026
தொடர்ந்து, நிமிடத்திற்கு 20,000 அடி வேகத்தில் கீழே சென்று கொண்டிருக்கிறோம், விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளாக போகிறது என தெரிவிக்கிறார்.
சில நிமிடங்களுக்கு முன்னர் பெண் பணியாளர் ஒருவர், கடவுளே! நமக்கு நேரமில்லை என அலறுகிறார்.
வான்வழி போக்குவரத்து கட்டுப்பாளர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லாமல் போனது.
என்ன நடந்தது?
முதலில் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை மற்றும் மழைப்பொழிவை எதிர்கொள்வதாகவும் சமாளிக்ககூடிய அளவில் இருப்பதாகவும் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததுடன் மேலும் 2000 அடி மேலே உயரத்தில் பறக்க அனுமதி கோரியுள்ளனர்.
அனுமதி கோரிய சிறிது நேரத்தில் 41,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது மிக வேகமாக கீழே இறங்க தொடங்கியது.
10,000 அடி என தொடங்கி 30,000 அடிக்கு மேலாக கீழிறங்கியது, தரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது வலதுபுறமாக விமானம் திரும்பியுள்ளது, இறுதி சிக்னல் விமானம் 8750 அடி உயரத்தில் இருந்த போது பதிவானது.
சில நொடிகளில் தீப்பிழம்பாக விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர்.