என்ன நடந்தது என்றே தெரியவில்லை... பிரித்தானியாவை நடுக்கிய சம்பவத்தில் சிறுவனின் வாக்குமூலம்
பிரித்தானியாவில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள சென்ற பாடசாலை மாணவி ஒருவர் சிறுவனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
நடந்தது நினைவில் இல்லை
தற்போது 17 வயதாகும் அந்த நபர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதுடன், சம்பவத்தின் போது தமக்கு என்ன நடந்தது என்பது நினைவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளான்.
இந்த வழக்கில் எதிர்வரும் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1ம் திகதி ஆகிய இரு தினங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
2023 ஜனவரி மாதம் Hexham பகுதியில் வைத்து Holly Newton மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். மொத்தம் 36 காயங்கள் அவர் உடலில் காணப்பட்டுள்ளது. தாக்குதல்தாரி சுமார் 45 நிமிடங்கள் Holly Newton-ஐ கணிகாணித்துள்ளதும், அவர் ஒருகட்டத்தில் தனியாக பேச ஒப்புக்கொண்டதை அடுத்து இருவரும் ஒரு சந்துக்குள் சென்றுள்ளனர்.
அனைத்தும் 60 நொடிக்குள்
இந்த நிலையிலேயே சமையலறை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளான். 12 முறை கத்தியால் Holly Newton-ஐ குத்தியுள்ளான். 19 முறை அவர் உடலை கத்தியால் கிழித்துள்ளான். இது அனைத்தும் 60 நொடிக்குள் நடந்து முடிந்தது என்றே கூறப்படுகிறது.
இதனையடுத்து Holly Newton மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட, காயங்கள் காரணமாக அவர் மரணமடைந்துள்ளார். தற்போது 17 வயதாகும் அந்த நபர் கைதாகும் போது பொலிசாரிடம் தெரிவிக்கையில், கத்தியால் தாக்கி தற்கொலை செய்து கொள்வதாகவே இருந்தேன், ஆனால் தனது கட்டுப்பாட்டை மீறி அது நடந்துவிட்டது என்றான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |