புத்திசாலிக் குரங்கு என பெயர் பெற்ற குரங்கிடம் சிக்கிய பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்
புத்திசாலிக் குரங்கு என பெயர் பெற்ற குரங்கிடம் சிக்கிய பச்சிளம் குழந்தையை, கூறு போட்டுக் கொன்றுள்ளது அந்தக் குரங்கு.
குழந்தையை பறித்துச் சென்ற குரங்கு
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினி குடியரசிலுள்ள Bossou என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் Seny Zogba என்னும் பெண்ணின் கையிலிருந்து அவரது எட்டு மாதக் குழந்தையான Yoh Hélèneஐ பறித்துச் சென்றுள்ளது ஒரு குரங்கு.
Credit: Alamy
அந்தக் குரங்கின் பெயர் Jeje. இந்த குறிப்பிட்ட வகை சிம்பன்ஸி குரங்குகள் கற்களை கருவிகளாக பயன்படுத்தி கொட்டை வகை உணவுகளை உடைத்து அவற்றினுள் இருக்கும் பருப்புகளை உண்ணும் திறன் கொண்டவை.
அதாவது, கற்களை எப்படி ஆயுதங்கள் போல பயன்படுத்துவது என்னும் அறிவுத்திறன் கொண்ட புத்திசாலிக் குரங்குகள் அவை.
Credit: Alamy
குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்
இந்நிலையில், குழந்தையைத் தேடி மக்கள் செல்ல, அந்த குரங்குகள் வாழும் Nimba Mountains Nature Reserve என்னும் விலங்குகள் காப்பகத்தில் அந்தக் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
Credit: Alamy
கோரம் என்னவென்றால், அந்தக் குழந்தையின் உடல் பாகங்கள் தனித்தனியாக வெட்டி எடுக்கப்பட்டிருந்தன.
அதாவது, அந்தக் குரங்குகள் உணவை எப்படி கல் ஆயுதங்களைக் கொண்டு வெட்டவும், உடைக்கவும் செய்யுமோ, அதேபோல, அந்தக் குழந்தையின் உடல் வெட்டப்பட்டு, அதன் உள்ளுறுப்புகள் அகற்றப்பட்டிருந்தன.
Credit: Alamy
முன்பு குரங்குகள் மனிதர்களைக் கண்டால் பயந்து விலகியோடும். இப்போது அவைகளுக்கு மனிதர்கள் மீதான பயம் போய்விட்டது என்கிறார் ஆய்வாளரான Gen Yamakoshi என்பவர்.
Credit: Solent News
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |