கடிதத்துடன் கணவருக்காக 80 ஆண்டுகள் காத்திருந்த 103 வயது மனைவி
103 வயது மூதாட்டி தனது கணவர் எழுதிய கடிதத்துடன் 80 ஆண்டுகள் காத்திருந்துள்ளார்.
103 வயது மூதாட்டி
தென் மேற்கு சீனாவின், குய்சோ மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் டு ஹுஷென்(Du Huzhen) என்ற 103 வயதான மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
இவருக்கு 1940 ஆம் ஆண்டு தன்னை விட 3 வயது இளையவரான ஹுவாங் ஜுன்ஃபு(Huang Junfu) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் சிறுது காலம் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். அப்போது இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அதன் பின்னர் அவரின் தாயின் இறுதிச்சடங்கை செய்த அவர், 1944 ஆம் ஆண்டு மீண்டும் ராணுவத்திற்கு திரும்பியுள்ளார்.
அதன்பிறகு அவர் மீண்டும் திரும்பி வரவே இல்லை. கடிதம் மூலம் பேசி கொண்டு இருந்துள்ளனர். ஜனவரி மாதம் 1952 க்கு பின்னர் அவரிடமிருந்து கடிதம் வருவதும் நின்றுள்ளது.
வேறு திருமணத்திற்கு மறுப்பு
இந்த கடிதத்தில், "குடும்பம் எவ்வளவு ஏழ்மையானதாக இருந்தாலும், மகனின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமது மறுசந்திப்புக்கு நிச்சயமாக சிறிது நேரம் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
இந்த காலத்தில், டு வை திருமணம் செய்ய பலரும் முன்வந்துள்ளனர். ஆனால் தனது கணவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் அவர் இருந்துள்ளார்.
பகல் நேரங்களில் விவசாய வேலையும், மாலை வேளையில் நெசவும் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றியுள்ளார்.
அவரது கணவர் 1950 காலகட்டத்தில் மலேசிய மற்றும் சிங்கப்பூரில் வசித்து வந்துள்ளார். அவரை பற்றி வேறு எந்த தகவலும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரை கண்டுபிடிக்க செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிடுவது, வெளிநாட்டு நிறுவனங்களை பணியமர்த்துவது உட்பட பல்வேறு வழிகளை முயற்சித்து கிடைக்கவில்லை என டுவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |