உக்ரைன்- ரஷ்யா போருக்கு இவர்கள் தான் காரணம்! சீனா பரபரப்பு குற்றச்சாட்டு
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பதட்டங்கள் எல்லை மீறி போனதற்கு நேட்டோ தான் காரணம் என சீனா குற்றம் சாட்டியுள்ளது.
நேட்டோவின் நடவடிக்கைகள் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பதட்டங்கள் எல்லை மீறி போகும் அளவிற்கு தள்ளியது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Zhao Lijian கூறினார்.
உக்ரைன் பிரச்சினை மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளை கையாள்வதில் சீனாவின் கவலைகளை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் அதன் உரிமைகள் அல்லது நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று Lijian வலியுறுத்தினார்.
ஒவ்வொரு கட்டத்திலும் பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துவது ஒருபோதும் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு வராது.
ஆனால், மாறாக சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரங்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு கடுமையான சிரமங்களை ஏற்படுத்தும்.
சீனாவும் ரஷ்யாவும் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் உட்பட சாதாரண வர்த்தக ஒத்துழைப்பு தொடரும் என்று Lijian கூறினார்.
அதேசமயம் உக்ரைனுக்கு 5 மில்லியன் யுவான் மதிப்புள்ள உணவு மற்றும் அன்றாடத் தேவைகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை அனுப்புவதாகவும் சீனா கூறியுள்ளது.