மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! இனி இவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்.. வெளியான முக்கிய அறிவிப்பு
சீனாவில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. சீனா நாட்டில் கொரோனா தொடங்கி இருந்தாலும் சில மாதங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர்.
ஆனால் பல்வேறு உலக நாடுகள் இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் தலைதூக்க தொடங்கியுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் உள்ள 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் சினோபார்ம் மற்றும் சினோவாக் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் குழந்தைகளுக்கு செலுத்த சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
ஹூபெய், ஃபுஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.