தைவானுக்கு அருகே புதிய ராணுவ பயிற்சி! அதிரடியாக அறிவித்த சீனா
சீன ராணுவம் தற்போது தைவானுக்கு அருகே புதிய சுற்று பயிற்சிகளை அறிவித்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். இது சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகை நடத்தியது.
நேற்றைய தினம் சீனாவின் Eastern Theatre Command, நீர்மூழ்கி மற்றும் கடல் தாக்குதல் நடவடிக்கைகளில் கூட்டுப்பயிற்சியினை மேற்கொள்வதில் கவனம் செலுத்துவதாக கூறியது.
இது தைவானின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் வகையில் அமையும் என சில பாதுகாப்பு ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.
(Eastern Theatre Command/Handout via Reuters)
இந்த நிலையில் நான்சியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தைவானை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் அதிக ராணுவப் பயிற்சிகளை சீனா அறிவித்துள்ளது.
PC: Getty Images
இதற்கு முன்பாக சீனாவின் ராணுவ அழுத்தத்தை மீறி தைவானுக்கு வருகை தருவதாக, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் பிரதம மந்திரி ரால்ப் கோன்சால்வ்ஸ் உறுதியுடன் கூறினார்.
மேலும் அவர் தைபேயில் நடந்த வரவேற்பு விழாவில், தைவானில் உள்ள நண்பர்களைப் பார்க்க செல்வதை சீன ராணுவப் பயிற்சிகள் தடுக்காது என்று தெரிவித்தார்.
wikidata