1,000 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.., சீனாவின் செயற்கை சூரியன் பற்றி தெரியுமா?
1,000 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்படக்கூடிய செயற்கை சூரியனை சீனா உருவாக்கியுள்ளது.
செயற்கை சூரியன்
பல்வேறு துறைகளில் பல்வேறு ஆய்வுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், 1,000 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்படக்கூடிய செயற்கை சூரியனை சீனா உருவாக்கியுள்ளது.
இந்த சோதனையை வெற்றிகரமாக சீனா முடித்துள்ளது. இது, வரும் காலத்தில் மின் உற்பத்தியை மொத்தமாக மாற்றக்கூடியதாகப் பார்க்கப்படுகிறது.
சீனாவின் "செயற்கை சூரியன்" என்று அழைக்கப்படும் எக்ஸ்பெரிமென்டல் அட்வான்ஸ்டு சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் ( Experimental Advanced Superconducting Tokamak (EAST)) உடன் அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் சீனா மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
அணுஉலை வெற்றிகரமாக பிளாஸ்மாவை 1,000 வினாடிகள் தாங்கி, 2023 இல் அதன் முந்தைய சாதனையான 403 வினாடிகள் (17.76 நிமிடங்கள்) சாதனையை முறியடித்தது என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது வரும் காலத்தில் மின் உற்பத்தியை மொத்தமாக மாற்றக்கூடியது.
சூரியனின் ஆற்றல் உற்பத்தியைப் பிரதிபலிப்பதை நோக்கமாகக் கொண்ட அணுக்கரு இணைவு, விஞ்ஞானிகளுக்கு நீண்டகால இலக்காக இருந்து வருகிறது.
ஆனால் 100 மில்லியன் டிகிரி செல்சியஸுக்கு மேல் தேவையான வெப்பநிலையை அடைவது ஒரு சவாலாக இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக சீன அறிவியல் அகாடமியின் பிளாஸ்மா இயற்பியல் நிறுவனத்தின் இயக்குனர் சாங் யுண்டாவோ கூறுகையில், "ஒரு ஃபியூஷன் கருவி நிலையான பிளாஸ்மா சுழற்சியைச் செயல்படுத்தப் பல ஆயிரக்கணக்கான நொடிகள் அதிக செயல்திறனில் செயல்பட வேண்டும்.
எதிர்காலத்தில் ஃபியூஷன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் இதன் பங்கு முக்கியமானது. அதை நாங்கள் சாதித்துள்ளோம். இது தன்னிச்சையான பிளாஸ்மா சுழற்சியை செயல்படுத்துகிறது" என்றார்.
சீன விஞ்ஞானிகள் 2006 ஆம் ஆண்டு முதல் EAST ஃப்யூஷன் ரியாக்டரை இயக்கி, நூறாயிரக்கணக்கான சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
அதன் வெற்றியால் உற்சாகமடைந்த சீனா, இணைவு ஆற்றலின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை விரைவுபடுத்த அன்ஹுய் மாகாணத்தில் நியூக்ளியர் பியூஷன் மூலம் செயல்படும் புதிய பரிசோதனை மையத்தைச் கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நியூக்ளியர் ஃப்யூஷன் மூலம் மின் உற்பத்தி செய்ய முடிந்தால் வெற்றிகரமான சாதனையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |