சீனாவின் அடுத்த முன்னேற்றம்., உள்நாட்டிலேயே DUV சிப் உற்பத்தி கருவிகள் தயாரிப்பு தொடக்கம்
சீனா, தன்னுடைய உள்நாட்டு தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் முயற்சியில், immersion deep-ultraviolet (DUV) lithography machines எனப்படும் சிப் உற்பத்தி கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கத் தொடங்கியுள்ளது.
இது, வெளிநாட்டு தொழில்நுட்பங்களின் மீது சீனாவின் சார்பை குறைக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த உற்பத்தி முயற்சியை, Shanghai Aishengna Electronic Technology Group எனப்படும் அரசு ஆதரவு பெற்ற நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இந்த நிறுவனம், சீனாவின் முன்னணி lithography start-ups-இன் தொழில்நுட்பக் குழுக்களை இணைத்துள்ளது.

DUV கருவிகள், உலகளவில் ASML எனும் நெதர்லாந்து நிறுவனத்தால் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தப்பட்டவை. சீனாவின் புதிய முயற்சி, ASML-க்கு உடனடி அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும், மேற்கத்திய நாடுகள் சிப் உற்பத்தி கருவிகள் மீது விதிக்கும் கட்டுப்பாடுகளை சமாளிக்க சீனாவுக்கு மாற்று வழியாக அமையும்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட DUV கருவிகள், SMIC, Hua Hong Semiconductor, ChangXin Memory Technologies (CXMT) போன்ற முன்னணி சிப் உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆண்டிலேயே வழங்கப்பட உள்ளன.
Aishengna நிறுவனம் 2023-ல் 7 பில்லியன் யுவான் முதலீட்டுடன் தொடங்கப்பட்டது. Huawei ஆதரவு பெற்ற SiCarrier-இன் இணை நிறுவனமான Yuliangsheng மற்றும் Shanghai Micro Electronics Equipment (SMEE) ஆகியவற்றின் தொழில்நுட்பக் குழுக்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
சீனாவிற்கு ASML-ன் மிக நவீன EUV கருவிகளை வாங்க அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து தடைவிதித்துள்ள நிலையில், இந்த உள்நாட்டு DUV உற்பத்தி, சீனாவின் சிப் தற்சார்பு முயற்சியில் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |