சீனாவில் 2 சுரங்க ரயில்கள் மோதிக் கொண்டு விபத்து: 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த 2 ரயில்கள் மோதிய விபத்தில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்து
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சுரங்க ரயில் பாதையில் அதிக போக்குவரத்து நெருக்கடி உள்ள நேரத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பயணிகள் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
Dec 14 evening: a train car of Beijing subway’s Changping Line (昌平线) broke apart… pic.twitter.com/bfvgLpsiND
— Byron Wan (@Byron_Wan) December 14, 2023
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை 19:00 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அவற்றில் 423 பேர் வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்தானது பனிப்பொழிவு அதிகமாக இருந்த நேரத்தில் சாங்பிங் சுரங்கப்பாதையில் ரயில் கீழ்நோக்கி இறங்கி கொண்டிருந்த போது ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
பின்னால் மோதிய ரயில்
அதிக பனிப்பொழிவு காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் முதலில் வந்த ரயில் திடீரென பிரேக் பிடிக்க நேர்ந்துள்ளது.
ஆனால் இதையடுத்து பின்னால் வந்த இரண்டாவது ரயிலால் உடனடியாக பிரேக்கை பிடித்து நிற்க முடியவில்லை.
இதனால் முதல் ரயிலின் பின் புறத்தில் மோதி இரண்டாவது ரயில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த விபத்தின் போது நூற்றுக்கணக்கான மக்கள் ரயிலுக்குள் மாட்டிக் கொண்ட நிலையில், காற்று சுழற்சிக்காக சிலர் அவசரகால சுத்தியலை எடுத்து ரயிலின் கண்ணாடிகளை உடைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |