ட்ரம்பின் அதிரடி வரி விதிப்புகளால் பெரும் ஆதாயங்களை அள்ளப்போகும் ஒரு ஆசிய நாடு
அமெரிக்காவுக்கு எதிராக சீனாவின் பதிலடி வரி விதிப்புகள் அமுலுக்கு வந்த நாளில், எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதிகளுக்கு வரி விதித்து டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிர்ச்சி அளித்துள்ளார்.
நலனுக்கு உகந்தவை அல்ல
அமெரிக்காவுக்கான எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதிகள் முன்னெடுக்கும் அனைத்து நாடுகளுக்கும் இந்த 25 சதவிகித வரி விதிப்பு என்பது பொருந்தும்.
எஃகு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகியவை இதனால் மீண்டும் கடுமையாக பாதிக்கப்படும். ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குறிப்பிடத்தக்க எஃகு ஏற்றுமதியாளர்களான தென் கொரியா, வியட்நாம், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை இந்த வரி விதிப்பு அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
அவுஸ்திரேலியா ஏற்கனவே இந்த விவகாரத்தில் விலக்கு அளிக்க ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாகக் கூறியுள்ளது, ஆனால் அவுஸ்திரேலியாவுடன் மேலும் சில நாடுகள் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கலாம் என்றே கூறப்படுகிறது.
அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசி, இந்த வரி விதிப்புகள் எதுவும் அமெரிக்க தேசிய நலனுக்கு உகந்தவை அல்ல என்ற வாதத்தை முன்வைப்பதே ட்ரம்பைப் பின்வாங்கச் செய்வதற்கான ஒரே வழி என பல நாடுகளின் தலைவர்கள் நம்புகின்றனர்.
மட்டுமின்றி, ஒவ்வொரு நாடும் அமெரிக்காவை எதிர்த்து நிற்கவும், ஒரு மூலையில் இருந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றே நிபுணர்கள் தரப்பின் வாதமாக உள்ளது.
இதுவரை, ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிகள் குறிப்பிட்ட நாடுகளை மட்டுமே குறிவைத்து வந்தன, சீனா மீது 10 சதவிகிதம், கனடா மற்றும் மெக்சிகோவுக்கு முதற்கட்டமாக 25 சதவிகிதம்.
ஆனால், இதற்கு பதிலடியாக சீனா, கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, நிலக்கரி, பண்ணை இயந்திரங்கள் மற்றும் பிக்-அப் லொரிகள் மீது 10 முதல் 15 சதவிகித வரிகளை விதித்துள்ளது.
அருமையாக பயன்படுத்தும்
அத்துடன் நின்று விடாமல், 25 முக்கியமான கனிமங்களுக்கான ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியதுடன் பல அமெரிக்க நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது. இதனிடையே, ஜனாதிபதி ட்ரம்பும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் தொலைபேசியில் உரையாட இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால், சீன ஜனாதிபதியுடன் பேசிக்கொள்ள எந்த அவசரமும் இல்லை என்றே ட்ரம்ப் கூறியுள்ளார். வரி விதிப்புகளுக்கு விலக்களிக்க சீனா அளிக்கவிருக்கும் வாக்குறுதி என்னவாக இருக்கும் என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.
மேலும், ட்ரம்பின் அதிரடி வரி விதிப்புகளால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் நாடுகளுக்கு முதன்மையான வர்த்தக கூட்டாளியாக தம்மை முன்நிறுத்த சீனா இந்த வாய்ப்பை மிக அருமையாக பயன்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, அமெரிக்காவை பாதுகாக்கிறேன், அமெரிக்க மக்களுக்கு முன்னுரிமை என தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் ட்ரம்பின் முடிவுகள் அந்த நாட்டை பின்னோக்கி நகர்த்தினால், அந்த வெற்றிடத்திற்குள் கால் வைக்கத் தயாராக இருக்கும் நாடு சீனா என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இதனால், ட்ரம்பின் வரி விதிப்பு அதிரடிகளால், சீனா பெரும் ஆதாயங்களை அள்ளப்போவது உறுதி என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |