பிரித்தானியாவில் களமிறங்கும் சீனாவில் அதிகம் விற்பனையாகும் கார்.. விலை உள்ளிட்ட தகவல்
கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் புதிய மொடல்களின் அலை 2026-ஆம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சீனாவின் அதிகம் விற்பனையாகும் கார் பிரித்தானியாவின் சந்தைக்கு வரவிருக்கிறது.
Galaxy Xingyuan
கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட 200,000 சீனத் தயாரிப்பு கார்கள் பிரித்தானிய மக்களால் வாங்கப்பட்டன. உள்நாட்டுச் சந்தைக்கு வெளியே தங்கள் விற்பனை அளவை அதிகரிக்க, புதிய உற்பத்தியாளர்கள் பலர் பிரித்தானியாவில் நுழைந்ததே இதற்குக் காரணம்.

அக்டோபர் மாதத்தில், சீனாவின் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Geely, தனது EX5 எஸ்யூவி மொடலை அறிமுகப்படுத்தியதன் மூலம், பிரித்தானிய மண்ணில் தனது வருகையை அறிவித்தது.
2030-ஆம் ஆண்டுக்குள் பிரித்தானியாவில் ஆண்டுக்கு 100,000 வாகனங்களை விற்பனை செய்வதை இலக்காகக் கொண்டிருப்பதாக அப்போது அந்த நிறுவனம் கூறியிருந்தது.
இருப்பினும், 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒரு சிறிய, மலிவு விலை மின்சார வாகனம் கிடைப்பது, அந்த எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
சீனாவில் Galaxy Xingyuan என அறியப்படும் EX2 மொடலானது 2025ல் அந்த நாட்டில் மிகவும் பிரபலமான வாகனமாகும். மட்டுமின்றி, அந்த நிதியாண்டில் அந்த நிறுவனம் 465,775 கார்களை விற்பனை செய்தது.
தற்போது பிரித்தானியாவில் கோடைக்காலத்தில் இந்த கார்கள் ஷோரூம்களுக்கு வரும்போது, இதன் விலை சுமார் 20,000 பவுண்டுகளில் இருந்து தொடங்கும்.
மேலும், பிரித்தானிய மக்கள் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கில் சீனக் கார்களை வாங்கி வரும் நிலையில், இதுவும் பிரித்தானியாவில் பெரும் வெற்றி பெறக்கூடும்.

நேரடியாகப் போட்டி
இந்த மின்சார சூப்பர்மினி கார், தற்போது பிரித்தானியாவில் விற்பனை செய்யப்படும் மிகச் சிறிய மின்சார வாகனங்களுடன் நேரடியாகப் போட்டியிடக் கூடும். தற்போது 21,500 பவுண்டுகளுக்கு விற்பனையாகும் ரெனால்ட் 5 மொடலுக்கு கடும் சவாலாக மாறக் கூடும்.

அத்துடன், 19,000 பவுண்டுகளுக்கு விற்பனையாகும் Citroen e-C3 மற்றும் 21,000 பவுண்டுகளுக்கு விற்பனையாகும் Fiat 500 ஆகிய கார்களுடன் 18,675 பவுண்டுகளுக்கு விற்பனையாகும் சீனாவின் BYD Dolphin Surf காருக்கும் சவாலாக மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 20,000 பவுண்டுகள் என்ற விலை, இது பிரித்தானியாவில் விற்கப்படும் மலிவான புதிய மின்சார வாகனங்களில் ஒன்றாக மாறும். ஆனால் இது சீனாவில் விற்கப்படுவதை விட விலை அதிகமாகும்.
சீனாவில் ஒரு ஆரம்ப நிலை மொடலை வெறும் 6,000 பவுண்டுளுக்கு வாங்க முடியும். இந்த நிலையில், பேற்றரி விலைகள் குறைந்து வருவதாலும், உற்பத்திச் செலவுகள் குறைந்திருப்பதாலும், உற்பத்தியாளர்கள் ஒப்பீட்டளவில் மலிவு விலையில் புதிய மின்சார வாகனங்களை சந்தைக்குக் கொண்டுவர முடிகிறது என்பதற்கு கீலியின் EX2 ஒரு சமீபத்திய சான்றாகும்.

சீனாவில் Galaxy Xingyuan என அறியப்படும் EX2 மொடலானது மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. மாதம் 40,000 எண்ணிக்கையில் EX2 மொடலானது விற்பனை செய்யப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் மட்டும் 50,000 பதிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பிரித்தானியாவில் Ford Puma சுமார் 56,000 பதிவுகளை சாதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |