அணுசக்தி தாக்குதலை தாங்கும் மிதக்கும் தீவைக் கட்டும் சீனா! முக்கிய அம்சங்கள்
சீனா அணு சக்தியை தாங்கும் மிதக்கும் தீவு ஒன்றை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சீனாவின் மிதக்கும் மொபைல் தீவு
சீனா ஆழ்கடல் செயல்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட அணுசக்தி வெடிப்புகளை தாங்கக்கூடிய அதிநவீன செயற்கை மொபைல் தீவு ஒன்றை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஆழ்கடல் அனைத்து வானிலை நிரந்தர மிதக்கும் ஆராய்ச்சிக் கூடம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மிதக்கும் தீவு திட்டமானது, சீனாவின் தசாப்த கால தீவிர ஆராய்ச்சி திட்டமிடலின் விளைவாகும்.

மிதக்கும் மொபைல் தீவின் முக்கிய அம்சங்கள்
138 மீட்டர் நீளமும், 85 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மிதக்கும் மொபைல் தீவானது சுமார் 78,000 டன் எடை கொண்டதாகும்.
இது சீனாவின் ஃபுஜியான் விமானம் தாங்கி கப்பலின் அளவிற்கு சமமாகும்.
கடல் நீரில் இருந்து 45 மீட்டர் உயரத்தில் நிற்கும் இந்த மிதக்கும் மொபைல் தீவில் 238 ஊழியர்கள் 4 மாதங்களுக்கு வெளியுலக விநியோகம் எதுவும் இன்றி செயல்பட முடியும்.
6-9 மீட்டர் கடல் அலைகளையும், அதிக ஆற்றல் கொண்ட வகை 17 புயல்களையும் தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

அணுசக்தி பாதுகாப்பு
அணுசக்தி தாக்குதலை தாங்கும் திறன் இந்த மிதக்கும் மொபைல் தீவின் முக்கிய மற்றும் அசாதாரண திறனாக பார்க்கப்படுகிறது.
இந்த தீவு அணுசக்தி வெடிப்பை எதிர்க்கும் GJB 1060.1-1991 என்ற சீன தர நிர்ணயக் குறியீட்டை உள்ளடக்கியுள்ளது.
அத்துடன் இந்த தீவில் மேம்பட்ட மெட்டா மெட்டீரியல்ஸ்(metamaterial) என்ற அடுக்கு தகடுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இவை அதி பயங்கரமான அதிர்ச்சிகளை கூட மென்மையான அழுத்தங்களாக மாற்றும் திறன் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |