அமெரிக்கா விதித்த காலக்கெடு: கடினமான முடிவை நோக்கி நகரும் உக்ரைன்
உக்ரைன் தேசிய நலன்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அமைதி உடன்படிக்கை
2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு அமெரிக்கா 28 அம்சங்கள் அடங்கிய புதிய சமாதானத் திட்டத்தை உருவாக்கி வருகிறது.
ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலங்களை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற ஆரம்பகட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முன்வைத்த கோரிக்கையையே, தற்போது டிரம்பின் புதிய சமாதானத் திட்டத்திலும் உள்ளது.
The American side presented points of a plan to end the war—their vision. I outlined our key principles. We agreed that our teams will work on the points to ensure it’s all genuine.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) November 20, 2025
We're geared up for clear and honest work—Ukraine, the U.S., our European and global partners. pic.twitter.com/DscaCBg4vW
எனவே இதனை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உட்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலர் ஏற்க மறுத்துள்ளனர்.
அதே சமயம் அமெரிக்கா அரசால் முன்மொழியப்பட்ட புதிய சமாதான திட்டத்தை ஏற்றுக் கொள்வது குறித்த தீவிரமான மதிப்பிட்டில் உக்ரைன் இறங்கியுள்ளது.
தேசிய நலன் மீது உறுதி
இந்நிலையில் நாட்டு மக்களிடம் காணொளி உரையில் பேசிய உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, வரவிருக்கும் வாரம் உக்ரைனுக்கு மிகவும் கடினமானதாக இருக்கலாம், உக்ரைன் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை எதிர்கொள்ள உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் முக்கியமான கூட்டாளியை இழக்கப்போகிறோமா அல்லது தனது தேசிய கண்ணியத்தை விட்டுக் கொடுக்கப்போகிறோமா என்ற இக்கட்டான நிலையை எதிர்கொள்ள உள்ளோம்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் கைகூடாமல் போவதற்கு உக்ரைனே பொறுப்பு என்று ரஷ்யா குற்றம் சாட்டுவதை நான் அனுமதிக்க போவதில்லை.

இந்த இக்கட்டான நேரத்தில் அரசாங்கமும், நாடாளுமன்றமும், அமெரிக்காவுக்கு விரைவாகவும், ஆக்கபூர்வமாகவும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் உக்ரைன் தேசிய நலன்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருப்பதாகவும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய சமாதான உடன்படிக்கையில் நன்றி தெரிவிக்கும் விடுமுறை நாளுக்குள் உக்ரைன் கையெழுத்திட்டாக வேண்டும் என அமெரிக்கா இலக்கு வைத்து இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் இந்த உரை வெளிவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |