2,200 கோடியில் உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய நாடு! ஈபிள் கோபுரத்தைவிட 200 மடங்கு உயரம்
சீனா 216 மில்லியன் பவுண்டுகள் செலவில் பிரம்மாண்டமான பாலத்தைக் கட்டியுள்ளது.
உலகின் மிக உயரமான பாலம்
ஆசியாவில் பெரிய நாடான சீனா, உலகின் மிக உயரமான பாலத்தை கட்டியுள்ளது.
Huajiang grand canyon எனும் இந்த பாலத்தை 216 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.2,200 கோடி) செலவில் இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் எஃகு ட்ரஸ்கள் சுமார் 22,000 மெட்ரிக் டன் எடை கொண்டவை. ஒரு பெரிய பள்ளத்தாக்கின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் நீளம் இரண்டு மைல்கள் என்பதால், இப்பள்ளத்தாக்கை விரைவாக கடந்து விடலாம்.
மூன்று ஈபிள் கோபுரங்களுக்கு சமம்
இந்த பாலத்தின் எஃகு ட்ரஸ்கள் மூன்று ஈபிள் கோபுரங்களுக்கு சமமான எடை கொண்டவை என்பதுடன் இரண்டே மாதங்களில் நிறுவப்பட்டன.
சீனா முக்கிய சுற்றுலா தலமாக அமைக்கப்பட உள்ள இந்த பாலம் வருகிற சூன் மாதம் திறக்கப்பட உள்ளது.
ஈபிள் கோபுரத்தை விட 200 மீற்றருக்கு மேல் உயரம் கொண்ட இந்தப் பாலம் ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை சாதனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |