இந்திய எல்லைக்கு அருகே புதிய வான் பாதுகாப்பு தளத்தை அமைத்துள்ள சீனா., வெளியான செயற்கைகோள் ஆதாரங்கள்
சீனா, இந்திய எல்லைக்கு அருகில் புதிய ஏவுகணை பாதுகாப்பு மையத்தை உருவாக்கி வருகிறது என செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
திபெத்தில் உள்ள பாங்காங் ஏரியின் கிழக்கு பகுதியில், 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லை மோதலுக்கு அருகில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த மையத்தில் கட்டுப்பாட்டு மையங்கள், படைவீரர் தங்கும் இடங்கள், வாகன களஞ்சியங்கள், ஆயுதக் களஞ்சியங்கள் மற்றும் ரேடார் அமைப்புகள் உள்ளன.
இதில் முக்கிய அம்சமாக TEL (Transporter Erector Launcher) வாகனங்களுக்கு ஏற்ற வகையில், மூடிய கூரையுடன் கூடிய ஏவுகணை ஏவுமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை HQ-9 வகை நீண்ட தூர ஏவுகணைகளை பாதுகாப்பாக மறைத்து வைக்கவும், தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.
இந்த அமைப்புகள் இந்தியாவின் நியோமா விமான நிலையத்திற்கு எதிரே உள்ள கார்கவுண்டி பகுதியில் காணப்படுகினறன.
Vantor என்ற அமெரிக்க விண்வெளி உளவுத்துறை நிறுவனம் வெளியிட்ட செயற்கைகோள் படங்களில், சில கூரைகள் திறந்த நிலையில் TEL வாகனங்கள் உள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகள், தெற்காசிய கடற்பகுதியில் சீனாவின் முன்பிருந்த இராணுவத் தளங்களை போலவே அமைக்கப்பட்டுள்ளன.
பாங்காங் ஏரிக்கு அருகிலுள்ள இரண்டாவது மையம் இன்னும் கட்டுமான நிலையில் உள்ளது. ASA ஆய்வாளர்கள் HQ-9 அமைப்புகளுக்குள் தரவுப் பரிமாற்ற அமைப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China missile base Pangong, HQ-9 missile shelters Tibet, China India border tensions, Pangong Lake defence site, China air defence HQ-9, Satellite images China missiles, Gar County missile launchers, Nyoma airfield China threat, China retractable missile shelters, India China military standoff