உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம்
சீனாவின் செயற்கை சூரியன் திட்டம் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Hefei-யில் உள்ள பிளாஸ்மா பௌதிகவியல் நிறுவனம் (ASIPP) இரண்டு முக்கிய சூப்பர் கண்டக்டிங் காந்தங்களை வெற்றிகரமாக சோதித்து அங்கீகரித்துள்ளது. இவை அணு இணைப்பு (Nuclear Fusion) ரியாக்டரின் முக்கிய கூறுகளாகும்.
21 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம், 582 டன் எடையுடைய டோராய்டல் ஃபீல்ட் சூப்பர் கண்டக்டிங் காந்தம் உலகின் மிகப்பெரியது.

இது 6.5 டெஸ்லா காந்தப்புலத்தை உருவாக்கி, 100 மில்லியன் டிகிரி வெப்பத்தில் உருவாகும் பிளாஸ்மாவை கட்டுப்படுத்தும். இதன் மூலம் பிளாஸ்மா வெப்பக் கோளத்தை வெற்றிகரமாக சுவரைத் தொடாமல் காந்தப்புலத்தில் நிலைநிறுத்த முடியும்.
மேலும், "சோலினாய்டு காயில்" எனப்படும் மற்றொரு சூப்பர் கண்டக்டிங் காந்தமும் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இது பிளாஸ்மா மின்சாரத்தை தூண்டி, ரியாக்டர் இயங்குவதற்கு "எஞ்சின் ஸ்பார்க் பிளக்" போல செயல்படுகிறது.
இந்த முன்னேற்றம் சீனாவை முழுமையான தொழில்நுட்ப தற்சார்பை நோக்கில் கொண்டு சென்றுள்ளது. வெளிநாட்டு தொழில்நுட்ப ஆதிக்கத்தை முறியடித்து, 100 சதவீதம் உள்ளூர் உற்பத்தி மூலம் சாதனை படைத்துள்ளது.
சீனாவின் திட்டப்படி, 2027-க்குள் "Burning Plasma Tokamak" முடிக்கப்படும். 2030-க்குள் அணு இணைப்பு மின்சாரம் உற்பத்தி செய்யும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது உலகின் முதல் ஃப்யூஷன் மின்நிலையமாக உருவாகும் வாய்ப்பும் உள்ளது.
இந்த முன்னேற்றம் மனிதகுலத்திற்கு சுத்தமான, முடிவில்லா ஆற்றல் வழங்கும் கனவை நிஜமாக்கும் முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |