செப்டம்பரில் 21 டன் தங்கம் வாங்கிய சீன மத்திய வங்கி
China buys 21 ton gold this september, 3-year record: சீன மத்திய வங்கி செப்டம்பரில் 21 டன் தங்கம் வாங்கியுள்ளது.
மிகப்பெரிய மாதாந்திர தங்க கொள்முதல்
சீனாவின் மத்திய வங்கி (People’s Bank of China – PBoC) செப்டம்பர் மாதத்தில் 21 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய மாதாந்திர தங்க கொள்முதல் என Kitco News தெரிவித்துள்ளது.

செப்டம்பர் இறுதியில் சீனாவின் தங்க கையிருப்பு 2,196 டன்னாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 23 மாதங்களாக சீனா தங்கத்தை வாங்கி வருகிறது.
கடந்த ஆகஸ்டில் 18.5 டன், ஜூலையில் 18 டன் வாங்கிய நிலையில், செப்டம்பர் மாத கொள்முதல் அதிகரித்துள்ளது. இது 2023 செப்டம்பர் மாதத்தில் 24 டன் வாங்கியதற்குப் பிறகு மிகப்பெரிய மாதாந்திர கொள்முதல் ஆகும்.
சீனாவின் வெளிநாட்டு நாணய கையிருப்பு செப்டம்பர் இறுதியில் 3.4 டிரில்லியன் டொலராக இருந்தது. இது முந்தைய மாதத்தை விட 38.1 பில்லியன் டொலர் குறைவாகும்.
அமெரிக்க டொலர் வலுவடைந்ததும், உலகளாவிய சொத்து விலைகள் குறைந்ததும் இதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
அதிகளவில் தங்கம் வாங்கும் நாடுகள்
உலக தங்க கவுன்சில் (World Gold Council) தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டில் சீனாவும் போலந்தும் அதிகளவில் தங்கம் வாங்கும் நாடுகளாக உள்ளன.
ஆகஸ்ட் மாதம் மட்டும் உலகளாவிய மத்திய வங்கிகள் 39 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. போலந்து இதுவரை 98 டன் தங்கத்தை வாங்கி முன்னிலையில் இருந்தாலும், சீனாவும் 80 டன் வாங்கி அதனை நெருங்கி வருகிறது.
சீனாவின் தொடர்ச்சியான தங்க கொள்முதல், உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் அசாதாரண நிலைகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |