தொழிலாளியை 4 நாட்கள் இருட்டறையில் அடைத்த நிறுவனம்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
சீனாவில் தனியார் நிறுவனம் ஒன்று பணியாளரை ராஜினாமா செய்ய வைப்பதற்காக இருட்டு அறையில் அடைத்து வேலை பார்க்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நிறுவனத்தின் கடுமையான நடவடிக்கை
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவை லியு என்ற விளையாட்டு கலை வடிவமைப்பாளர்(game art editor) தன்னுடைய அனுமதி நுழைவு சீட்டையும், பணி கணினியையும் பயன்படுத்த முடியாமல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் தனது நிறுவனத்திடம் முறையீடு செய்துள்ளார்.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அவருக்கான அனுமதி வழங்கப்பட்டது, ஆனால், லியு வழக்கம் போல் வேலை செய்யும் இடத்திற்கு பதிலாக, அவரை மின்சாரம் மற்றும் பிற பணியாளர்கள் இல்லாத வெற்று அறைக்கு அழைத்து செல்லப்பட்டு இருட்டு அறையில் பணி புரியுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார்.
அந்த இருட்டு அறையில் தொலைபேசிக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை, வேலை நேரம் முடிந்த பின்னர் "சுதந்திரமாக" வெளியேற அனுமதிக்கப்பட்ட போதிலும், இந்தச் சூழ்நிலை லியுவின் மனைவிக்கு கவலை அளித்துள்ளது.
இவ்வாறு 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற பிறகு, 5வது நாள் லியுவின் மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன் பிறகு, சம்பந்தப்பட்ட Guangzhou Duoyi Network நிறுவனம் தங்களது கொள்கைகளை லியு மீறிவிட்டதாக காரணம் காட்டி அவரை அதிகாரப்பூர்வ பணி நீக்கம் செய்துள்ளது.
லியு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம்
இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, லியு தங்கள் நிறுவன கொள்கைகளை மீறி, நிர்வாண படங்களையும், தொடர்பில்லாத இணையதளங்களையும் பார்த்ததாக Guangzhou Duoyi Network நிறுவனம் குற்றம் சாட்டியது.
இதனை மறுத்த லியு, அந்தப் படங்கள் தனது வேலைக்கு அவசியமானவை என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட செச்சுவான் நீதிமன்றம் 2024 மே மாதம் லியு-வுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.
மேலும், நிறுவனத்தின் செயல்கள் தொழிலாளர் சட்டங்களை மீறி, பாதுகாப்பான பணிச் சூழலை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை மீறியது என்று கண்டறிந்தது, லியுவுக்கு குறிப்பிடத்தக்க இழப்பீடு (சுமார் $52,200 USD) வழங்க உத்தரவிட்டது.
இருப்பினும் Guangzhou Duoyi Network நிறுவனம் இந்த தீர்ப்பை தனது Weibo கணக்கில் வெளியிட்டு சில தொழிலாளர் சட்டங்கள் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன என்று கருத்து தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |