தைவானை தொடர்ந்து சீண்டும் சீனா: அத்துமீறி நுழைந்த போர் விமானங்களால் பரபரப்பு
தைவான் ஜலசந்தி பகுதியில் எல்லை தாண்டி பறந்த சீன விமானங்களால் பரபரப்பு
கடற்படைக் கப்பல்கள் மற்றும் நிலம் சார்ந்த ஏவுகணை அமைப்புகளால் பதிலடி
தைவான் ஜலசந்தியில் சீனாவின் போர் விமானங்கள் தங்களது அதிகாரப்பூர்வமற்ற எல்லையை கடந்து போர் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதாக தைவான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகை மற்றும் அதனைத் தொடர்ந்து அமெரிக்க சட்டமியற்றும் குழுவின் வருகை ஆகியவற்றால் தைவானின் சுகந்திரம் தங்களது இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என சீனா கருதுகிறது.
5 PLAN vessels and 17 PLA aircraft around our surrounding region were detected today (August 20, 2022) until 1700(GMT+8). #ROCArmedForces have monitored the situation and responded to these activities with aircraft in CAP, naval vessels, and land-based missile systems. pic.twitter.com/guVGIcOdFb
— 國防部 Ministry of National Defense, R.O.C. ?? (@MoNDefense) August 20, 2022
இதனால் பெலோசியின் வருகையை ஆரம்பத்தில் இருந்தே கண்டித்த சீன அரசு, பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை சுற்றியுள்ள ஜலசந்தி பகுதிகளில் அடுத்தடுத்த போர் பயிற்சியை சீனா நடத்தி வருகிறது.
இந்தநிலையில், தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சீனா தொடர்ந்து தைவானை சுற்றி இராணுவ பயிற்சிகளை நடத்தி வருவதாகவும், 17 சீன விமானங்கள் மற்றும் 5 சீனக் கப்பல்கள் தைவான் ஜலசந்தி பகுதியில் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது.
REUTERS
அத்துடன் ஏழு சீன விமானங்கள் தைவானையும் சீனாவையும் பிரிக்கும் அதிகாரப்பூர்வமற்ற எல்லையின் மத்தியக் கோட்டின் கிழக்குப் பகுதியில் பறந்தன என தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: வானில் தூக்கி வீசப்பட்ட ரஷ்ய டாங்கி...எதிரிகளை கதிகலங்க வைத்த உக்ரைன்: வீடியோ ஆதாரம்
மேலும் சீனாவின் இந்த அத்துமீறல்களை தைவானின் ஆயுதப் படைகள் கண்காணித்து கடற்படைக் கப்பல்கள் மற்றும் நிலம் சார்ந்த ஏவுகணை அமைப்புகளால் பதிலடி கொடுத்துள்ளன என்று தெரிவித்துள்ளது.
REUTERS