வானில் தூக்கி வீசப்பட்ட ரஷ்ய டாங்கி...எதிரிகளை கதிகலங்க வைத்த உக்ரைன்: வீடியோ ஆதாரம்
உக்ரைன் தாக்குதலில் வானில் தூக்கி வீசப்பட்ட ரஷ்ய டாங்கி.
சுமார் 12 மில்லியன் மக்கள் உக்ரைனை வீட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா தகவல்.
உக்ரைனிய படையின் தாக்குதலில் ரஷ்யாவின் டாங்கி ஒன்று வானில் பல அடிக்கு தூக்கி வீசப்படும் காட்சிகளை உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 175 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கிட்டத்தட்ட 30,000க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 12 மில்லியன் மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை படி 5 மில்லியன் மக்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கும் 7 மில்லியன் மக்கள் உக்ரைனின் பிறப் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.
The General Staff of the Armed Forces of #Ukraine has published epic footage of the launch of #Russian tankers into space. pic.twitter.com/VojOqi0ZCt
— NEXTA (@nexta_tv) August 20, 2022
உக்ரைன் ரஷ்யா இடையிலான ராணுவ மோதலை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில் இருநாட்டுகளும் தீவரம் காட்டாத நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தாக்குதல்கள் தீவரமடைந்து வருகிறது.
இந்தநிலையில் உக்ரைன் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் டாங்கி ஒன்று வானில் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகளை உக்ரைனின் ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: இளைஞர்கள் அதிக மதுபானம் அருந்த வேண்டும்...பிரபல நாடு முன்னெடுக்கும் விசித்திர பிரச்சாரம்
மேலும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.