இளைஞர்கள் அதிக மதுபானம் அருந்த வேண்டும்...பிரபல நாடு முன்னெடுக்கும் விசித்திர பிரச்சாரம்
ஜப்பானில் 31 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மதுபான விற்பனை வீழ்ச்சி.
இளைஞர்கள் மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஜப்பான் அரசு பிரச்சாரம்
ஜப்பான் மக்கள் அதிக அளவில் மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் அந்த நாட்டு அரசு நாடு தழுவிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பொதுமக்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் கொரோனாவிற்கு பின் மாறிய வாழ்க்கை முறையால் ஜப்பான் பொதுமக்களிடம் மதுபானம் அருந்தும் பழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Shutterstock
அதனடிப்படையில் ஜப்பானில் 31 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மதுபான வரி வருவாயில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜப்பான் இளைஞர்கள் மத்தியில் மதுபான பயன்பாட்டை அதிகரிக்க வைக்கும் நோக்கில் ஜப்பான் அரசு ”சேக் விசா” என்ற பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: 145 மெகாபிக்சலில் எடுக்கப்பட்ட சூரியனின் துல்லியமான புகைப்படம்! இணையத்தை அதிரவைத்த ரெட்டிட் பயனர்
Reuters
ஜப்பானின் தேசிய வரி முகமை முன்னெடுக்கும் இந்த பிரச்சாரத்தின் படி, பொதுமக்கள் மத்தியில் மதுபான பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் 20 முதல் 39 வயதுக்குட்பட்டோர் முன்மொழிவுகளை அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.