ஹொங்ஹொங், தைவான் ஒலிம்பிக் வீரர்களின் பதக்கங்களை பறித்துக்கொண்ட சீனா: வெளிவரும் பின்னணி
டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களுடன் அமெரிக்காவை விட நாங்கள் தான் முன்னிலை பெற்றுள்ளோம் என சீனா அறிவித்துள்ளதன் பின்னணி வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்தமட்டில், பதக்க பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாவது இடத்தில் சீனாவும் வந்தது.
39 தங்கப்பதக்கம், வெள்ளி 41 மற்றும் வெங்கலம் 33 என மொத்தம் 113 பதக்கங்களை அமெரிக்கா கைப்பற்றியிருந்தது. சீனாவை பொறுத்தமட்டில் 38 தங்கப்பதங்கங்களுடன் மொத்தம் 88 பதக்கங்களே வென்றிருந்தார்கள்.
ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்து ஒரு வார காலம் கடந்த நிலையில், சீனா தங்களது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் தைவான், ஹொங்ஹொங் அணிகள் வென்றுள்ள பதக்கங்களையும் சீனா தங்கள் பட்டியலில் இணைத்துக் கொண்டு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்றவர்கள் நாங்களே என பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மட்டுமின்றி மக்காவ் வீரர்களின் பதக்கங்களையும் சீனா தங்கள் பட்டியலில் இணைந்துக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தைவான் 2 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 12 பதக்கங்களும், ஹொங்ஹொங் ஒரு தங்கத்துடன் மொத்தம் 12 பதக்கங்களும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்றிருந்தன.
ஆனால் உண்மையில் குறித்த தகவல் சீனா அரசாங்கத்தால் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.