ஈரான் சரக்கு கப்பலில் ஏவுகணைக்களுக்கான ரசாயனம்: திட்டவட்டமாக மறுத்த ஆசிய நாடு
அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் சரக்கு கப்பலுக்கும் சீனாவுக்கு எந்தவொரு சம்மதமும் இல்லை என்று சீனா மறுத்துள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட ஈரான் கப்பல்
ஈரானிய கொடியுடன் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு சென்ற டூஸ்கா(Touska) என்ற சரக்கு கப்பல் அமெரிக்க படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

சீனாவில் இருந்து வந்ததாக குற்றம்சாட்டப்படும் இந்த கப்பலில் ஏவுகணைகளுக்கான ரசாயனம் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே முன்வைத்த குற்றச்சாட்டில், அமெரிக்க படைகளால் சிறைபிடிக்கப்பட்ட கப்பல் சீனாவில் இருந்து ஈரானுக்கு சென்று கொண்டு இருந்ததாகவும், அதில் ஏவுகணைகளுக்கான ரசாயன பொருட்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கப்பலை நிறுத்த உத்தரவிட்டும் அதை ஏற்க மறுத்ததால் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம், ஈரானை தாங்கி பிடிக்க சீனா முயல்கிறது என்பது தெரிய வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சீனா மறுப்பு

அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன், வெளிநாட்டு கொடி கொண்ட ஒரு சரக்கு கப்பலுடன் எந்தவொரு தீய நோக்கமுள்ள தொடர்பையும், மிகைப்படுத்துதலையும் சீனா எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடிப்படையாக கொண்டு அமெரிக்கா சீனா மீது ஏதேனும் வரி உயர்வை மேற்கொண்டால் சீனாவும் அதற்கான தக்க பதிலடியை கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |