கடலுக்கு அடியில் மிதக்கும் தங்கம்: சீனாவின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு
ஆசியாவின் மிகப்பெரிய தங்கப் படிமங்களை சீனா கண்டுபிடித்துள்ளது.
சீனாவின் தங்க உற்பத்தி
உலகின் மிகவும் மதிப்புமிக்க உலோகங்களில் ஒன்றாக தங்கம் இருந்து வருகிறது. இதன் விலை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டாலும், தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வம் சிறிதும் குறையவில்லை.

இந்த மதிப்புமிக்க தங்கத்தை அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடாக சீனா இருந்து வருகிறது.
அதைப்போல், தங்கத்தை அதிக கையிருப்பு வைத்து நாடுகளின் வரிசையில் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்தப்படியாக சீனா உள்ளது.
மிகப்பெரிய தங்கப் படிமங்கள்
இந்நிலையில் தங்க உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் சீனா புதிய தங்கப் படிமங்களை கண்டுபிடித்துள்ளது.

அதாவது ஷான்டாங் மாகாணத்தின் லைஜோ நகரில் கடலுக்கு அடியில் சீனா மிகப்பெரிய தங்கப் படிமங்களை கண்டுபிடித்துள்ளது.
இங்குள்ள தங்கப் படிமங்களின் இருப்பு சுமார் 39 லட்சம் கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது சீனாவின் மொத்த தங்க கையிருப்பில் 26 சதவீதம் ஆகும், இதன் மூலம் சீனாவின் தங்க உற்பத்தியில் லைஜோ முதலிடம் பிடித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |