உக்ரைன் முழுமையாக அழியும் வரையில்... புடின் ஆதரவாளர் ஒருவரின் விவாத கருத்து
பிறக்கும் புத்தாண்டில் உக்ரைனில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கைகள் ஏற்கெனவே சிதைந்து போயுள்ள நிலையில், புடின் ஆதரவாளர் ஒருவரின் விவாத கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைதியான முறையில்
விளாடிமிர் புடின் தனது ஆண்டு இறுதி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உக்ரைன் போர் முடிவுக்கு வருவது குறித்த நம்பிக்கையை பதிவு செய்திருந்தார்.

அடிப்படை காரணங்கள் அனைத்தும் தீர்க்கப்படும் பட்சத்தில், ரஷ்யா இந்த மோதலை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக புடின் கூறியிருந்தார்.
பிறக்கும் புத்தாண்டில் எந்தவொரு இராணுவ மோதல்களும் இன்றி, அமைதியாக வாழ ரஷ்ய மக்ள் மிகவும் விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கணிப்பது கடினம்
ரஷ்யா அனைத்து மோதல்களையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முயற்சிக்கிறது என்றும் புடின் தெரிவித்திருந்தார். ஆனால், புடினின் முதன்மையான ஆதரவாளர்களில் ஒருவரான Anatoly Wasserman இந்த மோதல் விரைவில் தீர்க்கப்படலாம் என்ற நம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஏற்கனவே களமிறங்கியுள்ளார்.

இந்தப் போரின் முடிவுத் திகதியை கணிப்பது கடினம் என குறிப்பிட்டுள்ள அவர், அது உக்ரைனின் முழுமையான அழிவை உள்ளடக்கியதாக இருக்கும் என்றார்.
நேட்டோ அமைப்பும் நமக்கு எதிராகப் போரிடுவதால், இந்தப் போர் எப்போது முடிவடையும் என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது என்றார். இதனால், உக்ரைன் முழுமையாக சரணடையும் வரையில் போர் நீடிக்கலாம் என்றார்.

ரஷ்ய-உக்ரேனியப் போர் தொடர்பாக, வாசர்மேன் மீது 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி பிரித்தானிய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |