சீனாவின் முன்னாள் வேளாண் அமைச்சருக்கு மரண தண்டனை விதிப்பு
சீனாவின் முன்னாள் வேளாண் அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சர், தாங் ரெஞ்சியான் (Tang Renjian), 2007 முதல் 2024 வரை பல பதவிகளில் பணியாற்றிய காலத்தில், 268 மில்லியன் யுவான் மதிப்பிலான பணம் மற்றும் சொத்துக்களை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜிலின் மாகாண நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து, அதை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளது.
தாங், 2024 நவம்பரில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியால் வெளியேற்றப்பட்டார். அதற்கு 6 மாதங்களுக்கு முன்பே ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். விசாரணை வேகமாக நடைபெற்றது.
தாங், 2017 முதல் 2020 வரை கான்சு மாகாண ஆளுநராக இருந்தார். பின்னர் வேளாண்மை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping), 2020 முதல் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளில் தூய்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகிறார்.
ஜனவரி 2025-ல் அவர் ஊழல் என்பது கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும், அது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
இந்த வழக்கும் சீனா அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளின் தீவிரத்தையும், அதிகாரிகளின் நேர்மையை உறுதி செய்யும் முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China Ex Minister Tang Renjian, China Minister death sentence, Tang Renjian bribery case